தரம் குறைந்த உடைகள் அணிவேன்! தந்தை சார்லஸ் கொடுத்த பணம் போதவில்லை... ஹரி நம்பமுடியாத தகவல்
இளவரசர் ஹரி தான், தரம் குறைந்த சலுகை விலையில் உடைகளை வாங்கி அணிந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சலுகை விலையில்...
நினைவு குறிப்பு புத்தகமான “ஸ்பேர்”(Spare)ல் இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, மேகனுடன் தனக்கு திருமணம் ஆவதற்கு முன்னர் தனியாக இருந்த போது தரம் குறைந்த சலுகை விலையில் கிடைக்கும் உடைகளை வாங்கினேன்.
நான் பொதுவாக அணியும் உடைகளை வாங்குவதற்கு மட்டுமே தந்தை சார்லஸ் கொடுத்த பணம் சரியாக இருந்தது. நான் தினமும் அணியும் உத்யோகபூர்வ உடை வாங்க நானே தான் பணம் தயார் செய்ய வேண்டியிருந்தது.
spotsclick
ஆடைகளை
இதையடுத்தே சலுகை விலையில் ஆடைகள் கிடைக்கும் TK Maxxக்கு செல்வேன். அங்கு தரம் குறைந்த சலுகை விலையில் கிடைக்கும் ஆடைகளை வாங்கி அணிவேன்.
நன்றாக இருக்கும் என ஒரு உடையை கண்டால் அதை எடுத்து கொள்வேன், அதன் நிறம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜ குடும்பத்தை சேர்ந்த ஹரி இப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை கூட பெற்றிருக்கிறாரா என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.