திருமணத்துக்குப் பின் காதலிகளை அணுகி உதவிகோரிய இளவரசர் ஹரி... அதிர்ச்சியடைந்த காதலிகள் சொன்ன பதில்
இளவரசர் ஹரி மேகனைத் திருமணம் செய்வதற்கு முன், கிட்டத்தட்ட 10 பெண்களை காதலித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்நிலையில், சமீபத்தில் தனது முன்னாள் காதலிகளை அணுகிய ஹரி அவர்களிடம் ஒரு உதவி கோரியுள்ளார்.
இளவரசர் ஹரியின் வாழ்க்கை வரலாறு குறித்த Spare என்னும் புத்தகம், வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியாக உள்ளது.
அந்த புத்தகத்துக்காக ஹரி தனது முன்னாள் காதலிகளை அணுகினார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தனது புத்தகத்தில் தனது முன்னாள் காதல்கள் குறித்து குறிப்பிட ஹரி விரும்பியிருக்கிறார். அது தொடர்பாக அவர் தனது முன்னாள் காதலிகளை அணுக, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்களாம்.
தங்களுக்கும் ஹரிக்கும் இருந்த காதல் குறித்து தாங்கள் யாராவது ஊடகங்களுடன் பேசியிருந்தால் ஆத்திரத்தில் ஹரி தாம் தூம் என் அவானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார். இப்போது, அவருக்கு இலாபம் என்பதால், தனது காதல்கள் குறித்து பேச விரும்புகிறாராம் என்பது அவர்களில் பலரது கருத்து.
சரி, ஹரி உதவிகோரி அணுகியபோது, அவர்கள் என்ன பதில் சொன்னார்களாம் தெரியுமா?
சிலர் நாகரீகமாக, யோசிக்கிறோம் என்று கூறினார்களாம். மற்றவர்களோ, முடியாது என்றே வெளிப்படையாக கூறிவிட்டார்களாம்!