இளவரசர் ஹரியின் மகனுக்கு இன்று பிறந்தநாள்: குழப்பத்தில் மன்னரின் குழுவினர்
இளவரசர் ஹரியின் மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு இன்று பிறந்தநாள். ஆனால், மன்னர் சார்லசுக்கும் அவரது குழுவினருக்கும், குழந்தை ஆர்ச்சிக்கு என்ன பரிசு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
இளவரசர் ஹரியின் மகனுக்கு பிறந்தநாள்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மூத்த மகனான இளவரசர் ஆர்ச்சி, இன்று, அதாவது மே மாதம் 6ஆம் திகதி, தனது ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Image: PA
குழப்பத்தில் மன்னரின் குழுவினர்
மன்னர், தனது பேரனான ஆர்ச்சிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டையும் ஒரு சிறிய பரிசும் அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn. ஆர்ச்சியின் தாயாகிய மேகனுக்கு, வீட்டில் கைப்பட செய்த பரிசுப்பொருட்கள் மீதுதான் பிரியமேயொழிய, விலையுயர்ந்த ஆடம்பரப் பரிசுப் பொருட்கள் மீது விருப்பம் கிடையாது என்பதால், மன்னர், தானே தன் கைப்பட வரைந்த ஓவியம் ஒன்றை தனது பேரனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் அவர்.
ஆனாலும், தான் அனுப்பும் பரிசுப்பொருளை ஹரியும் அவரது மனைவி மேகனும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதே என மன்னரும் அவரது குழுவினரும் கவலையில் இருக்கிறார்களாம்.
Image: Getty Images
குட்டி இளவரசரும், இளவரசர் வில்லியமுடைய மகனுமான ஜார்ஜுக்கு, மன்னர் தனது கையால் செய்யப்பட்ட, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ஊஞ்சல் ஒன்றை பரிசாக வழங்கினாராம். ஆனால், அப்படிப்பட்ட பரிசுப்பொருட்கள் ஆர்ச்சிக்கு மிக ஆடம்பரமானவை என ஹரி ஏற்கனவே மன்னரிடம் கூறியிருக்கிறாராம்.
ஆக, மன்னர் சார்லசும் அவரது குழுவினரும், குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு என்ன பரிசு வழங்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |