இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் வேஷம் கலைந்தது... நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று வெளியிட்டதால், அது தன் தனியுரிமையை மீறியதாகக் கூறி அதன் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அத்துடன், ஹரி மேகனுடைய வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் ஒன்று வெளியான நிலையில், அந்த புத்தகம் எழுதப்படுவதற்கு தாங்கள் உதவவில்லை என்றும் மேகன் தரப்பு தெரிவித்திருந்தது.
அந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பே கிடைத்தது.
ஆனால், மேகனுடைய முன்னாள் உதவியாளரான Jason Knauf, மேகன் கூறியது உண்மையில்லை என்று கூறி, மேகனுக்கெதிரான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆதாரங்கள், மேகன் தனது உதவியாளரான Jason Knaufக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள். அவற்றில், தான் எழுதும் கடிதம், பத்திரிகைகளில் லீக் ஆகும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளன.
அத்துடன், தங்கள் வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதப்பட்டபோது, அதற்கு தாங்கள் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்திருண்ட நிலையில், உண்மையில் அதில் என்னென்ன விடயங்கள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து மேகன் தன் உதவியாளருக்கு தெரிவித்த விடயங்களையும் அவர் இப்போது வெளியிட்டுள்ளார்.
தற்போது குட்டு வெளிப்பட்டு விட்டதால், வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார் மேகன்.
பிரித்தானிய நீதிமன்றத்தை குழப்பியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள மேகன், Mr Knauf எங்கள் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் எழுதுவோருக்கு சில தகவல்களை அளித்ததை தான் அறிந்திருந்ததாகவும், அந்த விவரங்களை எழுத்தாளர்களுக்கு அளிப்பது தொடர்பாக அவர்களுடன் சந்திப்பு ஒன்றிற்கு திட்டமிட்டிருந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் என்ன தகவல்களையெல்லாம் அளித்தார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ள மேகன், Mr Knauf கொடுத்த தகவல்களின்பேரில், அந்த புத்தகத்தில் என்னென்ன எழுதப்படவிருந்தது என்பது போன்ற விவரங்கள் தனக்கு மறந்துவிட்டது என்றும், அதற்காக தான் மன்னிப்புக் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்குத் தொடுத்தவரையோ, அல்லது நீதிமன்றத்தையோ குழப்பும் எண்ணமோ விருப்பமோ தனக்கு இல்லை என்றும் மேகன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், பிரித்தானிய பத்திரிகைகள் மேகனைக் கேலி செய்து, 'Little Miss Forgetful' என்பது போன்ற தலைப்பில் அவர் மன்னிப்புக் கோரிய செய்தியை வெளியிட்டுள்ளன.