மீண்டும் பிரித்தானிய மண்ணில்.. ஆனாலும் நாங்கள் - இளவரசர் ஹரி கூறிய விடயம்
Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் ஊடகத்திடம் பேசிய இளவரசர் ஹரி, தாய் மண்ணிற்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்த கேள்விகளை புறக்கணித்தார்.
சவால்கள்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிரித்தானியா திரும்பியதில் இருந்து பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.
பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்
இந்த சூழலில், கிரீன்விச்சின் வரலாற்று சிறப்புமிக்க Old Royal Naval College வளாகத்தில் நடைபெற்ற முதல் Invictus Spirit Awards விழாவில் ஹரி கலந்துகொண்டார்.
அப்போது சிவப்பு கம்பள வரவேற்பு பாதையில் நின்றிருந்த செய்தியாளர் ஒருவர், "ஹரி, ஹரி...உங்கள் மாமாவின் புத்தகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று உரக்கக் கேட்டார். அதற்கு தீவிர முகபாவனையை ஹரி பதிலாக தந்தார்.
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
எனினும், நேற்றிரவு அவர் அளித்த முதல் பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் பிரித்தானிய மண்ணில் இருப்பதும், பல பழைய முகங்களையும், நண்பர்களையும் காண்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.
பல நிகழ்வுகள் நிறைந்ததாக இது அமைந்திருக்கிறது; ஆனாலும் நாங்கள் எங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம். குழந்தைகள் பாடசாலைகளில் இருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
மேலும், நான் கூறியது போல் மீண்டும் பிரித்தானிய மண்ணிற்கு திரும்புவது அற்புதமாக இருக்கிறது. பிரித்தானியா திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் 'விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக' இருந்தது. அடுத்த ஆண்டு பர்மிங்காமிற்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.
