நான் எப்போதும் ராஜ குடும்பத்தின் அங்கம் தான்: விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த இளவரசர் ஹரி
நான் என்றுமே ராஜ குடும்பத்தின் அங்கமே என்று இளவரசர் ஹரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் உக்ரைன் பயணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பிறகு 3 முறையாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு பேசிய இளவரசர் ஹரி, தன்னை அரசியல்வாதியாக பார்க்க வேண்டாம், தான் ஒரு மனிதாபிமானியாக மற்றும் சேவையின் மதிப்பை அறிந்த நபராக உக்ரைனுக்கு வந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பேசிய இளவரசர் ஹரி, உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்ட போது, அதன் இறையாண்மையை காப்பதாக அமெரிக்கா அளித்த உறுதிமொழியை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து இளவரசர் ஹரியின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இளவரசர் ஹரி பிரித்தானியாவின் பிரதிநிதி அல்ல, இளவரசர் ஹரியை விட தான் பிரித்தானியாவின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பதிலடி கொடுத்திருந்தார்.
நான் ராஜ குடும்பத்தின் அங்கம்
இந்நிலையில் சசெக்ஸ் இளவரசர் ஹரி, தான் ஒரு பணியாற்றாத அரச குடும்ப உறுப்பினர் என்ற விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார்.

ITV செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நான் எப்போது ராஜ குடும்பத்தின் அங்கமாகவே இருப்பேன், நான் எதற்காக பிறந்தேனோ, அந்த பணியை தற்போது செய்து வருகிறேன். மக்களை சந்திப்பது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடக வெளிச்சம் படாத மக்களின் பிரச்சினைகள் மீது கவனத்தை திருப்புவதே தன்னுடைய முதன்மை நோக்கம் என்றும் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |