இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் அம்பலம்: வெளிவரும் புதிய பின்னணி
இளவரசர் ஹரியின் ரகசிய விசா ஆவணங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இளவரசருக்கு முன்னுரிமை
இளவரசர் ஹரியின் குடியேற்ற ஆவணங்கள் தொடர்பான முன்னர் வெளியிடப்படாத தரவுகளை வெளியிட அமெரிக்க அரசாங்கத்திற்கு அவகாசம் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதால் அல்லது பிரித்தானிய இளவரசருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதா என்பதை நிறுவுவதற்காக தரவுகளை வெளியிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தவறான நடத்தைக்கான எந்த ஆதாரத்தையும் சுட்டிக்காட்டவில்லை என்றே நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என ஹரி குறிப்பிட்டுள்ளதன் விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை என்றே குறிப்பிடுகின்றனர். அத்துடன், ஹரி விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் எந்த சலுகைகளும் அளிக்கவில்லை என்றே நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அவரே ஒப்புக்கொண்டிருந்தார்
மேலும், நீதிமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் நீதிபதி உறுதி அளித்துள்ளார். இளவரசர் ஹரி வெளியிட்டிருந்த Spare நினைவுக்குறிப்பில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவரே ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்த நிலையிலேயே Heritage அறக்கட்டளை இளவரசர் ஹரி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை நாடியது.
இளவரசர் ஹரி தனது விசா விண்ணப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொய் கூறியிருக்கலாம் அல்லது ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் முந்தைய வெள்ளை மாளிகை நிர்வாகத்தால் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என Heritage அறக்கட்டளை குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, ஹரியை நாடு கடத்தும் முயற்சியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |