இளவரசர் ஹரி என்னை ஏமாற்றி மயக்கிவிட்டார்: ஹரி கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ள பெண்
இளவரசர் ஹரி தனது புத்தகமான ‘Spare'ஐ வெளியிட்டதைத் தொடர்ந்து பலர் அவரை விமர்சித்துவருகிறார்கள்.
பழைய கதைகளைக் கிளறி மக்களை தொந்தரவு செய்யும் ஹரி
தனது தனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக, தனது புத்தகத்தில் எழுதியுள்ள பழைய கதைகள் பலவற்றை வெளியே சொல்லிவருகிறார் ஹரி.
ஆனால், அவை பலருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகின்றன.
அவ்வகையில், தான் முதன் முதலில் ஒரு பெண்ணுடன் பாலுறவுகொண்ட விடயத்தை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஹரி, அதை விளம்பரப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட பெண்ணான சாஷா (Sasha Walpole) என்னும் பெண், அந்த விடயத்தைக் குறித்து ஊடகங்களிடம் பேசவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
Credit: Dan Charity
ஹரி என்னை ஏமாற்றி மயக்கிவிட்டார்
இந்நிலையில், இளவரசர் ஹரி தன்னை, தனது பிறந்தநாளின்போது மயக்கிவிட்டதாக சாஷா (Sasha Walpole) தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளுக்கு தன் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்து அட்டையும், ஒரு பொம்மையும் கொடுத்து தன்னை மயக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சாஷா.
அந்த வாழ்த்து அட்டையில், பாஸ் என கையெழுத்திட்டுள்ளார் ஹரி. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னைத் தன் நண்பர்கள் பாஸ், பாஸா, ஸ்பைக், பாஸரூனி என்றெல்லாம் அழைப்பார்கள் என ஹரியே கூறியுள்ளார்.
இந்த பிறந்தநாளுக்குப் பின் நடந்த பார்ட்டியில் எக்கச்சக்கமாக மது அருந்திவிட்டுத்தான், சாஷாவிடம் தனது கன்னித்தன்மையை இழந்ததாக ஹரி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Credit: Dan Charity
Credit: Dan Charity
Credit: Dan Charity