திருமணத்துக்கு முன்பே இரகசியமாக உறவு வைத்துக்கொண்ட ஹரியும் மேகனும்: வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்
ராஜ குடும்பத்தினரின் கதைகளைக் கேட்டால், குறிப்பாக, அவர்களுடைய காதல்களைக் குறித்துக் கேட்டால், தலை சுற்றுகிறது.
மேகனின் காதல்களும் திருமணங்களும்
மறைந்த பிரித்தானிய மகாராணியாரைத் தவிர, வேறு யாரும் ஒரே நபரைக் காதலித்து, அவரையே திருமணம் செய்ததுபோலத் தெரியவில்லை!
சார்லசுக்கு ஏராளம் காதலிகள், டயானாவுக்கும் பல காதலர்கள், ஹரிக்கும் பல காதலிகள். மேகன் கதையோ, அதைவிட மோசம்.
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மார்க்கல், ஹரியைத் திருமணம் செய்வதற்கு முன் அமெரிக்கரும் திரைப்படத் தயாரிப்பாளரான Trevor Engelson என்பவரை 2004ஆம் ஆண்டிலிருந்தே காதலித்துவந்துள்ளார். 2011இல் இருவரும் திருமணம் செய்து 2014இல் விவாகரத்து செய்துள்ளார்கள்.
Awesome to help @meghanmarkle take on the #ALSIceBucketChallenge today!! Such a good sport! pic.twitter.com/29DhHys4sQ
— Rory McIlroy (@McIlroyRory) August 20, 2014
அதற்குப் பின் இரண்டு ஆண்டுகளாக Cory Vitiello என்னும் கனேடிய உணவக உரிமையாளரைக் காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்துவந்துள்ளார் மேகன்.
2016ஆம் ஆண்டு, Cory Vitielloவுடன் தொடர்பில் இருந்தபோதுதான் ஹரியை சந்தித்துள்ளார் மேகன். கண்டதும் காதல், நிச்சயதார்த்தம், பின் திருமணம் என, இன்று பழையதை எல்லாம் மறந்து, வேறு மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் மேகன்.
திருமணத்துக்கு முன்பே உறவு
ஆக, அப்படி பல காதல்கள், திருமணங்கள் என வாழ்ந்த மேகனுக்கு ராஜ குடும்பக் கட்டுப்பாடுகள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
ஆனாலும், ஹரிக்கு ராஜ குடும்பக் கட்டுப்பாடுகள் தெரியுமே!
இருந்தபோதிலும், திருமணத்திற்கு முன்பே தாங்கள் இரகசியமாக உறவு வைத்துக்கொண்டதாக தனது Spare புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.
2016ஆம் ஆண்டு, தனது தாயின் கல்லறையில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார் ஹரி. அப்போது ஹரியை இரகசியமாக சந்திக்க லண்டன் வந்துள்ளார் மேகன்.
அப்போது அவர்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகவில்லை, 2017ஆம் ஆண்டுதான் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. ஆகவே, ஹரியை இரகசியமாக தான் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு, பின்பக்க வழியாக வரச்சொல்லியிருக்கிறார் மேகன்.
பதற்றத்துடன் அவரது அறை வாசலுக்கு ஹரி வர, இரு கைகளையும் நீட்டி ஹரியை இழுத்து அணைத்துக்கொண்டாராம் மேகன். அன்றைய இரவை ஹரியும் மேகனும் அந்த ஹொட்டல் அறையில் செலவிட்டுள்ளார்கள்.
காலையில், உணவு வழங்க ஹொட்டல் துணை மேலாளர் வர, மேகன் அப்போது நடிகை அல்லவா, அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த மேலாளர்.
ஹரியை குளியலறைக்குள் ஒளிந்துகொள்ளுமாறு மேகன் கூற, அவரோ, கட்டிலில் மெத்தைக்கடியில் சுருண்டு படுத்துக்கொண்டாராம். வெகு நேரம் அந்த மேலாளர் மேகனிடம் பேசிக்கொண்டிருக்க, மெத்தைக்குள் சுருண்டுகிடந்த ஹரிக்கு மூச்சு திணறத் துவங்கிவிட்டதாம்.
ஆக, ராஜ குடும்பத்தில் பிறந்த ஹரி, கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி திருமணத்துக்கு முன்பே மேகனுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளார், அதை தனது புத்தகத்திலும் வெளிப்படையாக எழுதியுள்ளார். அப்புறம் என்ன, அவர் எதிர்பார்த்ததுபோலவே Spare அமோக விற்பனையாமே!