இளவரசர் ஹரியின் புத்தகத்தில் எங்கள் கதை கண்டிப்பாக வராது... அது ரகசியம்: அடித்துக் கூறும் பெண்
இளவரசர் ஹரியுடன் செலவிட்ட அந்த நெருக்கமான நாட்கள் தமது வாழ்க்கையில் மறக்க முடியாதது என தொலைக்காட்சி பிரபலம் கேத்தரின் ஓமன்னி கூறியுள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயார்
இளவரசர் ஹரியை தாம் சந்திக்கும் போது அவருக்கு 21 வயது எனவும் தமக்கு அப்போது 34 வயது, இரண்டு பிள்ளைகளுக்கு தாயார் எனவும் கேத்தரின் ஓமன்னி கூறியுள்ளார்.
Credit: My Story Media
தங்களின் அந்த நெருக்கமான நாட்கள் தொடர்பில், இளவரசர் ஹரி கண்டிப்பாக தமது புதிய புத்தகத்தில் ஒரு வார்த்தை கூட பதிவு செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தற்போது 51 வயதாகும் கேத்தரின் ஓமன்னி முதன்முறையாக தமக்கும் இளவரசர் ஹரிக்கும் இடையேயான அந்த ரகசிய உறவு தொடர்பில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தமது முன்னாள் காதலிகள் தொடர்பில், புதிய புத்தகத்தில் ஹரி வெளிப்படையாக கூற இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே, தமக்கும் ஹரிக்குமான அந்த உறவு தொடர்பில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளதாக கேத்தரின் ஓமன்னி குறிப்பிட்டுள்ளார்.
இரவு விடுதியில் இருவரும் ஒன்றாக
2006 மே மாதம் லண்டனில் உள்ள Chelsea and Eclipse இரவு விடுதியில் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு, ஹரியின் நண்பரின் வீட்டுக்கு சென்றதாக கேத்தரின் தெரிவித்துள்ளார்.
@AP
இளவரசர் ஹரியை சந்திக்கும் போது தாம் விவாகரத்து பெற்று, இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததாக கேத்தரின் குறிப்பிட்டுள்ளார். ஹரியின் நண்பரின் வீட்டு குளியலறையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் இளம் வயது நண்பர்கள் போல நடந்து கொண்டதையும் கேத்தரின் நினைவுகூர்ந்துள்ளார்.
அதன் பின்னர் ஹரி அருமையான பன்றி இறைச்சி சாண்ட்விச் ஒன்றை சமைத்து வழங்கினார் எனவும் கேத்தரின் தெரிவித்துள்ளார். அந்த சமையலறையில் ஹரியுடன் பேசிய அனைத்தும் தமக்கு தற்போதும் நினைவில் இருப்பதாகவும், அங்கிருந்து தாம் வீடு திரும்பும்போது ஹரி தந்த முத்தம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று எனவும் கேத்தரின் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Solarpix
வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று
இதன் பின்னர் மீண்டும் இருமுறை ஹரியுடன் சந்திப்பு நிகழ்ந்தது எனவும், அதன் பின்னர் ஹரி தமது அலைபேசி இலக்கத்தை மாற்றிக்கொண்டதாகவும் 2009 வரையில் இருவரும் சந்திக்கவே இல்லை எனவும் கேத்தரின் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பார்படாஸில் நடந்த போலோ போட்டியில் இருவரும் கடைசியாக சந்தித்துக் கொண்டதாகவும் கேத்தரின் நினைவுகூர்ந்துள்ளார்.
ஹரி போன்ற நபருடன் நட்பை நீட்டித்துக்கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக கேத்தரின் தெரிவித்துள்ளார்.