டயானாவின் மரணம்., ஹரியின் துக்கத்தை சமாளிக்க உதவிய வாசனை திரவியம்
இளவரசர் ஹரி தனது தாய் டயானாவின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்தை சமாளிக்க, அவரது வாசனை திரவியம் உதவியதாக கூறியுள்ளார்.
ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகம்
இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகமான 'Spare' செவ்வாய்கிழமை (ஜனவரி 10) வெளியானது.
இந்தப் புத்தகத்தில், இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயானாவின் வாசனை திரவியத்தின் வாசனை அவரது மரணத்தை எவ்வாறு சமாளிக்க உதவியது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
Getty Images
டயானாவின் மரணம்
1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா இறந்த பிறகு, இந்த புத்தகத்தில் இளவரசர் ஹரி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஹரிக்கு அப்போது 12 வயது.
கென்சிங்டன் அரண்மனையில் தூங்கச்செல்லும் நேரங்கள் உட்பட டயானாவைப் பற்றி அவர் நினைவில் வைத்திருப்பதைப் பற்றி சிந்திக்குமாறு தனது சிகிச்சையாளர் தன்னை வலியுறுத்தியதாக ஹரி கூறினார்.
இளவரசர் ஹரி தனது சிகிச்சை அமர்வுகளில் ஒன்றில், "அம்மாவுக்குப் பிடித்த வாசனை திரவியத்தின் ஒரு பாட்டிலை அலுவலகத்திற்கு" கொண்டு வந்ததாகப் பகிர்ந்து கொண்டார், அதன் வாசனையை அவர் எப்படி உணர்ந்தார் என்பதை விளக்கினார்.
டயானாவின் வாசனை திரவியம்
"Van Cleef & Arpels-ன் First எனும் அந்த வாசனை திரவியத்தை, நான் மூடியைத் திறந்து, ஆழமான முகர்ந்து பார்த்தேன்” என்று இளவரசர் ஹரி எழுதினார்.
"வாசனை என்பது நமது பழமையான உணர்வு என்று எங்கோ படித்தேன், அந்த நேரத்தில் நான் அனுபவித்தவற்றுடன் பொருத்தமாக இருந்தது, என் மூளையின் மிக முதன்மையான பகுதியாக உணர்ந்தவற்றிலிருந்து உருவான காட்சிகள்" என்று வாசனை திரவியத்தை முகர்ந்த பிறகு டயானாவின் நினைவுகள் எழுந்ததாக இளவரசர் ஹரி புத்தகத்தில் எழுதினார்.
Reuters
சாக்ஸில் இனிப்புகளை திணித்த டயானா
“ஒரு நாள் லுட்கிரோவில் அம்மா என் சாக்ஸில் இனிப்புகளை திணித்தது எனக்கு நினைவிருக்கிறது. பள்ளியில் இனிப்புகள் தடை செய்யப்பட்டன, அதனால் மம்மி பள்ளி விதிகளை மீறி, என்னைப்பார்த்து சிரித்துக்கொன்டே அப்படி செய்தார். இது என்னை இன்னும் அதிகமாக நேசிக்க வைத்தது" என்று இளவரசர் ஹரி எழுதினார்.