தன்னந்தனியே மகாராணியின் கல்லறையருகே கண்ணீர் சிந்தி நின்ற இளவரசர் ஹரி: கலங்கவைத்துள்ள ஒரு சம்பவம்
இது மறைந்த பிரித்தானிய மகாராணியார் எலிசபெத்தின் முதலாமாண்டு நினைவு நாள். ஆனால், நடந்த விடயங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எத்தனையோ காலத்துக்கு முன் இறந்துபோன மூத்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அவரது குடும்பத்தினர் கடமைக்கு அஞ்சலி செலுத்துவது போலத்தான் இருந்தது மகாராணியாரின் முதலாமாண்டு நினைவு நாள் அநுசரிக்கப்பட்ட விதம்.
ஒன்று சேராத குடும்பம்
ஆம், மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு ஒன்று சேர்ந்த ராஜ குடும்பம், அவரது முதலாமாண்டு நினைவு நாளுக்கு ஒன்று சேரவில்லை. ஆளுக்கொரு பக்கம், சொல்லப்போனால், ஆளுக்கொரு இடத்திலிருந்து மறைந்த மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் ராஜ குடும்ப உறுப்பினர்கள்!
தன்னந்தனியே மகாராணியின் கல்லறையருகே கண்ணீர் சிந்தி நின்ற இளவரசர் ஹரி
மகாராணியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, விண்ட்சர் மாளிகையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு வந்த இளவரசர் ஹரி, தனியாக மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதே நேரத்தில், அங்கு மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தவந்த Amy Giles என்னும் பெண், ஹரி தன்னந்தனியே மகாராணியின் கல்லறையருகே நின்றதைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.
அவரது கன்னங்கள் சிவந்துபோயிருந்தன, அவர் அழுதுகொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். எனக்கு அதில் ஆச்சரியமில்லை, ஏனென்றால், நானும் அழுதுகொண்டுதான் இருந்தேன் என்கிறார் Amy.
இப்படி மகாராணியாரின் செல்லப்பேரனான ஹரி தன்னந்தனியே மகாராணியின் கல்லறையருகே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க, ராஜ குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், குறிப்பாக, மன்னர், ராணி, வில்லியம், கேட், யாருமே புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு வரவில்லை!
தனித்தனியே அஞ்சலி செலுத்திய ராஜ குடும்ப உறுப்பினர்கள்
மன்னர் சார்லசும், ராணி கமீலாவும், ஸ்கொட்லாந்திலுள்ள Crathie Kirk என்னும் தேவாலயத்தில் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் வேல்ஸ் நாட்டிலுள்ள Pembrokeshire என்னுமிடத்தில் அமைந்துள்ள புனித டேவிட் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களுடன் அவர்களுடைய பிள்ளைகள் இருந்ததுபோல் தெரியவில்லை.
ஆக மொத்தத்தில், மகாராணியாரின் முதலாமாண்டு நினைவு நாளுக்கே ராஜ குடும்பம் ஒன்று சேரவில்லை. ஹரியை சந்திக்கக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடா என்பது தெரியவில்லை.
ஆனால், அதற்காக மகாராணியாருக்கு இப்படி ஒரு புறக்கணிப்பைச் செய்யவேண்டுமா என்னும் கேள்விக்கு பதிலில்லை. இப்படி முக்கியமான நாளில், ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் நிற்கும் ராஜ குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக உள்ளது எனலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |