இளவரசி டயானாவின் கல்லறைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, முதன்முறையாக, தனது பிள்ளைகளை, தன் தாயும், பிள்ளைகளின் பாட்டியுமான இளவரசி டயானாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்.
முன்பின் யோசிக்காமல் முடிவெடுத்த ஹரி
இளவரசர் ஹரி, விவாகரத்தான ஒரு அமெரிக்க நடிகையான மேகனை திருமணம் செய்துகொண்டது ராஜ குடும்பத்தில் பலருக்கும் பிடிக்கவில்லை.
அதேபோல, மேகனுக்கும் ராஜ குடும்பத்தில் வாழ்வது எளிதானதாக இல்லை.

ஆக, ராஜ குடும்பத்தைவிட்டு மேகன் கணவனைப் பிரிக்க, ஹரியும் அவரது மனைவியும் ராஜ குடும்பத்திலிருந்தும், பின்னர் பிரித்தானியாவிலிருந்தும் வெளியேற, அமெரிக்காவில் சென்று குடியமர்ந்தது ஹரி குடும்பம்.
தன் மனைவிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து, முன்பின் யோசிக்காமல் அமெரிக்கா செல்ல ஹரி முடிவு எடுத்துவிட்டார்.
விளைவு, ராஜ குடும்பத்தில், இளவரசர்களாக வளர வேண்டிய ஹரியின் பிள்ளைகளான ஆர்ச்சியும் லிலிபெட்டும் ராஜ குடும்பத்துடன் தொடர்பே இல்லாமல் தனியாக எங்கோ வாழ்ந்துவருகிறார்கள்.

ஆக, தாத்தாவான மன்னர் சார்லசின் அரவணைப்பையும், சகோதரர்களான ஜார்ஜ், சார்லட், லூயிஸின் அருகாமையையும் இழந்துவிட்டார்கள் ஹரியின் பிள்ளைகள்.
டயானாவின் கல்லறைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் ஹரி உயிருடன் இருக்கும் தாத்தாவையே பிள்ளைகள் எப்போதாவதுதான் சந்திக்கிறார்களென்றால், ஏற்கனவே மறைந்துவிட்ட பாட்டியான இளவரசி டயானாவைக் குறித்த பிள்ளைகளின் அறிவு எந்த அளவுக்கு இருக்கும்?
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இளவரசி டயானாவின் பிறந்தநாள் வேறு நெருங்கி வருகிறது.

இந்நிலையில், தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வரும் ஹரி, ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரித்தானியாவில் செலவிட இருக்கிறார்.
ஆக, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பிள்ளைகளை தன் தாயான இளவரசி டயானாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் ஹரி.

இளவரசி டயானாவின் கல்லறை, இங்கிலாந்திலுள்ள Northamptonshireஇல் அமைந்துள்ள அவருடைய குடும்ப நிலத்தில், அல்த்தோர்ஃப் இல்லம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
செயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு ஏரியின் நடுவே டயானாவின் கல்லறை அமைந்துள்ளது.
ஆகவே, டயானாவின் கல்லறையைக் காணவேண்டுமானால், அந்த ஏறியில், சிறு படகொன்றில் பயணித்துதான் அங்கு செல்ல முடியும்.

டயானாவில் இழப்பு அவரது பேரப்பிள்ளைகளுக்கு துக்கமான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஹரிக்கே தன் தாயின் இழப்பு ஜீரணிக்க முடியாத ஒரு விடயம்தான்.
காரணம், இளவரசி டயானா உயிரிழக்கும்போது ஹரிக்கு வயது 12, டயானாவுக்கோ வெறும் 36 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |