இளவரசர் ஹரி தன் அண்ணனுடன் பேச ஒரு வாய்ப்பு: மன்னர் சார்லசுடைய பட்லர் கூறும் தகவல்
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் தன் மனைவி மேகனால் எழுந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து இளவரசர் ஹரி குடும்பத்துடன் ராஜ அரண்மனையை விட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார்.
முன்னர் நகமும் சதையும் போலிருந்த இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் அதற்குப் பின் சரியாக பேசிக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை.
இன்னொரு வாய்ப்பு
இன்று இளவரசர் வில்லியம் தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆக, சகோதரர்கள் பேசிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் மன்னர் சார்லசுடைய பட்லராக இருந்த Grant Harrold.
Grant Harrold, 2004 முதல் 2011 வரை சார்லசுடைய பட்லராக இருந்தார். பொதுவாக ராஜ குடும்பத்தினர் தங்கள் பிறந்தநாள் நிகழ்வுகளை பெரிதாக வெளியே காட்டிக்கொள்வதில்லை என்று கூறும் அவர், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை பரிமாறிக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.
இளவரசர் வில்லியமுடைய பிறந்தநாள் சகோதரர்கள் இருவரும் உறவாடிக்கொள்ள இன்னொரு வாய்ப்பு என்று கூறும் Grant Harrold, ஹரி நிச்சயம் தன் அண்ணனை தொடர்பு கொள்வார் என்று தான் நம்புவதாக தெரிவிக்கிறார்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |