நீண்ட இடைவெளிக்குப்பின் தந்தையை சந்திக்கும் இளவரசர் ஹரி: சகோதரரை சந்திப்பாரா?
பிரித்தானிய இளவரசர் ஹரி செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா வர இருக்கும் நிலையில், அவர் மன்னர் சார்லசை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா வரும் ஹரி
செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, WellChild என்னும் தொண்டு நிறுவன விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஹரி பிரித்தானியா வருகிறார்.
இதற்கிடையில், பிரித்தானியா வரும் ஹரி, தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தையும் மகனும் சந்தித்து சுமார் 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சமீபத்தில் ஹரி தரப்பு பிரதிநிதிகளும், மன்னர் தரப்பு பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.
அப்போதே ஏதாவது முக்கிய விடயம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஹரி பிரித்தானியா வரும் செய்தி நல்ல விடயம் நடக்கலாம் என்னும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
என்றாலும், ஹரியை அவரது சகோதரரான இளவரசர் வில்லியம் சந்திக்கமாட்டார் என்றே கருதப்படுகிறது.
ஹரி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் குடும்ப விடயங்களையும் தனக்கு லாபம் கிடைக்கும் நோக்கில் விளம்பரப்படுத்துவதற்காகவே பயன்படுத்திக்கொள்வதாக வில்லியம் கருதும் நிலையில், அதனால் தேவையில்லாமல் தலைப்புச் செய்தியாக விரும்பவில்லை என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |