மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி: பக்கிங்காம் அரண்மனையில் தங்கப்போவதாக தகவல்
பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.
இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன், பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியா வந்திருந்தார்.

அப்போது, அவர் குடும்பமாக மன்னர் சார்லசை சந்தித்தார்.
இந்நிலையில், வருடாந்திர WellChild விருதுகள் வழங்கும் விழா தொடர்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் செப்டம்பர் மாதம் பிரித்தானியா வர உள்ளார் ஹரி.
கடந்த முறை அவர் பிரித்தானியா வந்தபோது, முன்கூட்டியே சரியாக திட்டமிடாததால், அவரும் அவரது குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் தங்க முடியாமல் போய் விட்டது.
ஆனால், இம்முறை, பக்கிங்காம் அரண்மனையில் தங்க அவருக்கு மீண்டும் அறை ஒன்று ஒதுக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய மகனாகவே இருந்தாலும், அவர் பக்கிங்காம் அரண்மனையில் தங்க திட்டமிட்டால், பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவேண்டுமாம்.
அதாவது, அவருக்கு அறை ஒதுக்கி, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய நேரம் தேவை என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.
இதற்கிடையில், இம்முறையும் ஹரியுடன் மேகனும் தம்பதியரின் பிள்ளைகளும் வருகிறார்களா என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |