கவலைக்கிடமான நிலையில் ராணியாரின் உடல் நிலை... தனியாக ஸ்கொட்லாந்து பறந்த ஹரி
இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் மட்டும் லண்டனில் தங்கிவிட்டதாக தகவல்
ராணியாரின் தகவல் வெளியானதை அடுத்து ஹரி, தனியாக ஸ்கொட்லாந்துக்கு விரைந்துள்ளார்.
பிரித்தானிய ராணியாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நெருங்கிய அரச குடும்பத்தினர் ஸ்கொட்லாந்துக்கு விரைந்துள்ளனர்.
இளவரசர் சார்லஸ், வில்லியம், ஆண்ட்ரூ உட்பட 7 பேர்கள் ஒரே விமானத்தில் ஸ்கொட்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் மட்டும் லண்டனில் தங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@afp
ராணியாரின் அனைத்து பிள்ளைகளும் தற்போது ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் திரண்டுள்ளனர். இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட் ஆகியோரும் ராணியாரின் படுக்கை அருகே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஜேர்மனி செல்லவிருந்த இளவரசர் ஹரி, ராணியாரின் தகவல் வெளியானதை அடுத்து தனியாக ஸ்கொட்லாந்துக்கு விரைந்துள்ளார். முன்னதாக ஹரியுடன் மேகனும் பால்மோரல் அரண்மனைக்கு செல்வார் என்றே தகவல் வெளியானது.
@getty
மாலையில் நடக்கவிருந்த விருது வழங்கும் விழாவை ரத்து செய்துவிட்டு மேகன் பால்மோரல் செல்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஹரி மட்டுமே பால்மோரல் அரண்மனைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
96 வயதான ராணியார் மருத்துவர்களின் ஆலோசனையை அடுத்து, ஓய்வில் உள்ளார். செவ்வாய்க்கிழமை போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
@pa
ஆனால் அதன் பின்னர் அவரது உடல் நிலை குன்றியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராணியார் தற்போதும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.