இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா? நிபுணர் கருத்து
Prince Harry's return to Home sparked hope that the brothers would reconcile: இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி, ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.
வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா?
இளவரசர் ஹரி பிரித்தானியா வந்து இத்தனை வாரங்கள் ஆகியும், தன் அண்ணனான இளவரசர் வில்லியமை சென்று சந்திக்கவில்லை.

ஹரியின் தாய் டயானா முதல், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் வரை, மன்னராகும் இளவரசர் வில்லியமுக்கு உறுதுணையாக இளவரசர் ஹரி நிற்பார் என்றே நம்பியிருந்தார்கள்.
ஆனால், ஹரியோ, தான் ஸ்பேர் என தன்னைத்தான் அழைத்துக்கொண்டு தன் சுயசரிதைப் புத்தகத்தில், தன் கோபத்தையும் வெறுப்பையும் தன் அண்ணன் மற்றும் அண்ணி மீது உமிழ்ந்துவிட்டார்.
சட்டப்படி, பிரித்தானியாவில் மன்னருடைய மூத்த மகன்தான் அடுத்து மன்னராகவேண்டும். இது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், வாய்க்கு வந்தபடி பேசி பிரிவினையை ஏற்படுத்திவிட்டார் ஹரி.
ஹரி, எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுப்பவர், மூடுக்கு ஏற்றபடி நடந்துகொள்பவர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவர் தன் அண்ணனுக்கு துரோகம் செய்வார் என யாரும் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், ஹரி துரோகம் செய்துவிட்டார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |