இளவரசர் ஹரிக்கு துவங்கியது சிக்கல்: ரகசிய ஆவணங்களை வெளியிட நீதிபதி முடிவு
பிரித்தானிய இளவரசர் ஹரி எப்படி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி பெற்றார், அவர் தனது விசா தொடர்பான விடயங்களில் பொய் சொன்னாரா என்பது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை வெளியிட விரும்புவதாக, அந்த வழக்கைக் கையாளும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரிக்கு துவங்கியது சிக்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்றொரு கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும்.
ஹரி தனது சுயசரிதைப் புத்தக்மான ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அப்படியானால், விசா விண்ணப்பத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என அவர் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.
ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என்னும் நிலையும் உருவானது.
வழக்கை விசாரித்த, Carl Nichols என்னும் நீதிபதி, இளவரசர் ஹரியின் விசா தொடர்பான ஆவணங்களை அவரது தனியுரிமை கருதி வெளியிட இயலாது என்று கூறியிருந்தார்.
ஆனால், ஹரிக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவந்த ட்ரம்ப் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளதைத் தொடர்ந்து நீதிபதி Carl Nicholsஇன் முடிவில் மாற்றம் தெரிகிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரி எப்படி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி பெற்றார், அவர் தனது விசா தொடர்பான விடயங்களில் பொய் சொன்னாரா என்பது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை வெளியிட விரும்புவதாக தற்போது நீதிபதி Carl Nichols தெரிவித்துள்ளார்.
ஆக, நீதிபதியின் முடிவால், ஹரி தனது விசா தொடர்பான விடயங்களில் பொய் சொன்னாரா என்பது தெரியவரும் என்பதால், ஹரிக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது.
ஹரி விசா தொடர்பான விடயங்களில் பொய் சொல்லியிருந்தால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளதால், ஹரிக்கு சிக்கல் ஏற்படலாம் என்றே தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |