இளவரசர் ஹரி விசா விவகாரம்: அமெரிக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
இளவரசர் ஹரி, விசா தொடர்பான ஆவணங்களில் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக, Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.
உருவான அச்சம்
இளவரசர் ஹரி தனது ’ஸ்பேர்’ புத்தகத்தில் வெளியிட்டிருந்த பல விடயங்களில், அவர் பலவகை போதைப்பொருட்களை பரிசோதித்துப் பார்த்ததாக கூறியிருந்தார்.
ஆனால், அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பத்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில் எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும். அப்படியிருக்கும் நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் ஹரி, விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.
ஹரி, விசா தொடர்பான ஆவணங்களில் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.
ஆக, ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் உருவானது.
அமெரிக்க அதிகாரிகள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
ஆனால், அமெரிக்க அதிகாரிகள் பதிவுகளின்படி, சம்பந்தப்பட்ட நபரின் தனியுரிமை விடயங்களை மீறி, அது தொடர்பான விடயங்களை வெளியிடும் அளவுக்கு இந்த அலுவலகம் அதில் பொது நலன் இருப்பதாக கருதவில்லை என்று கூறிவிட்டனர்.
கோபமடைந்துள்ள Heritage Foundation அமைப்பைச் சேர்ந்த Nile Gardiner, இந்த விவாதத்தில் அர்த்தமில்லை. ஒளிவு மறைவின்மையே இல்லாத ஜோ பைடனின் நிர்வாகத்திடமிருந்து இப்படி ஒரு பதில் வருவதில் ஆச்சரியமில்லை என சாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |