மறைந்த எலிசபெத் மகாராணியாரின் நினைவிடத்தில் இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி பிரித்தானியா வந்துள்ள நிலையில், முதல் வேலையாக, தனது பாட்டியாரான மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரித்தானியாவில் இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, WellChild children’s charity awards என்னும் தொண்டு நிறுவனத்தில் விருதுகள் வழங்கும் விழாவுக்காக பிரித்தானியா வந்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மூன்றாவது ஆண்டு நினைவுநாள் ஆகும்.
ஆக, பிரித்தானியா வந்திறங்கியதும், விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் மகாராணியாரின் நினைவிடத்துக்குச் சென்ற ஹரி, அங்கு தனது பாட்டியாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஹரி தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பாரா என்பதை அறிய ராஜகுடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், ஹரிக்கு அரண்மனையில் தங்க இடம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும், மன்னரை சந்திக்க ஹரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |