கவர்ச்சி நடன விடுதிக்குச் சென்ற இளவரசர் ஹரி: சரமாரியாக கேள்வி கேட்ட சட்டத்தரணி
தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக இளவரசர் ஹரி ஊடகம் ஒன்றின்மீது வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், நீதிமன்றத்தில், சட்டத்தரணி அவரை சரமாரியாக கேள்வி கேட்டு திக்குமுக்காடவைத்தார்.
கவர்ச்சி நடன விடுதிக்குச் சென்ற இளவரசர் ஹரி
தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக இளவரசர் ஹரி தி மிரர் ஊடகக் குழுமம் மீது வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், மிரர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணியான Andrew Green இளவரசர் ஹரியை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.
2006ஆம் ஆண்டு, தனது இராணுவப் பயிற்சியை முடித்ததைக் கொண்டாடுவதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள Spearmint Rhino என்னும் கவர்ச்சி நடன விடுதிக்குச் சென்றிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதுடன், ஏராளம் புகைப்படங்களும் வெளியாக, அரண்மனை வட்டாரம் கொந்தளித்தது.
Credit: ©Karwai Tang
தற்போது நடந்துவரும் வழக்கு விசாரணையின்போது, அந்த சம்பவத்தையும் இழுத்தார் மிரர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணியான Andrew Green.
அந்த விடயம் தனது தொலைபெசி ஹேக் செய்யப்பட்டதால்தான் வெளிவந்ததாக ஹரி தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா அல்லது அது வெறும் யூகத்தின் அடிப்படையிலானதா என்று கேட்டார் Andrew Green.
Credit: PA
ஆக, ஹரி முன்வைத்துள்ள சில குற்றச்சாட்டுகளுக்கு அவரால் ஆணித்தரமாக பதிலளிக்க முடியவில்லை.
104 முறை காதலி, 2 முறை மட்டும் மனைவி
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஹரியின் சாட்சியத்தின்போது அவர் அளித்துள்ள 55 பக்க சட்ட ஆவணங்களில், 104 முறை ஹரியின் முன்னாள் காதலியான செல்சியைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
Credit: PA
ஆனால், அவரது மனைவியான மேகனைக் குறித்து இரண்டே இரண்டுமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனது முன்னாள் காதலியான செல்சியைக் குறித்து பேசும்போதெல்லாம், ’my girlfriend’ என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார் ஹரி!