தந்தை சார்லஸ் போல இருக்க கூடாது! சீக்கிரம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளவரசர் ஹரி: காரணம் இதுதான்
குடும்பத்தில் எனக்கு தான் முதலில் திருமணம் நடக்கும் என நம்பினேன் என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஹரி திருமண கனவு
நினைவு குறிப்பான Spare-ல் இளவரசர் ஹரி பல விடயங்கள் பற்றி எழுதியுள்ளார். அதன்படி, தனது குடும்பத்தில் தனக்கு தான் முதலில் திருமணம் நடக்கும் என நம்பியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் தான் முதலில் திருமணம் செய்வேன் என கருதினேன். ஏனென்றால், திருமணம் செய்வதை மிகவும் எதிர்நோக்கியிருந்தேன்.
CHRIS FLOYD/PHIL NOBLE - POOL/GETTY
தந்தை சார்லஸ் போல இல்லாமல்...
நான் ஒரு இளம் கணவனாக, ஒரு இளம் தந்தையாக இருப்பேன் என்று நான் எப்போதும் கருதினேன், ஏனென்றால் நான் என் தந்தை போல மாறக்கூடாது என்று தீர்மானித்தேன்.
ஆனால் வில்லியமுக்கு முதலில் திருமண ஏற்பாடுகள் நடந்தது, அதில் சிறப்பாக கலந்து கொண்டு அவரை வாழ்த்தினேன் என தெரிவித்துள்ளார்.
வில்லியம் - கேட் தம்பதிக்கு கடந்த 2011லிலும், ஹரி - மேகனுக்கு 2018லும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.