இன்னும் சிறிது நேரத்தில்... மீண்டும் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கும் இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, இன்று மீண்டும் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்க இருக்கிறார்.
இன்னும் சிறிது நேரத்தில்...
பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி உலகம் முழுவதும் ஒளிபரப்பாகி, ராஜ குடும்பத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த பேட்டியின் தாக்கத்தால் பிரிந்த இளவரசர் வில்லியமும் ஹரியும் இன்னமும் சேர்ந்தபாடில்லை. அப்படியிருக்கும் நிலையில், ஹரி மீண்டும் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி இன்னும் சில மணி நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
பேட்டி ஒளிபரப்பு எப்போது?
அமெரிக்கத் தொலைக்காட்சியான American Broadcasting Company அல்லது ABC தொலைக்காட்சியில், தினமும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை Good Morning America என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
அந்த நிகழ்ச்சியில்தான் ஹரியின் பேட்டி ஒளிபரப்பாகிறது. பிரித்தானிய நேரப்படி, அந்நிகழ்ச்சி மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.
ஆக, இன்னும் சில மணி நேரத்தில் ஹரியின் தொலைக்காட்சி பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.
TOMORROW: A @GMA Exclusive: The all-new interview with Prince Harry on his life with Meghan, how his father King Charles is doing and his passion supporting wounded warriors. pic.twitter.com/tyNtHnxxpB
— Good Morning America (@GMA) February 16, 2024
என்ன பேசப்போகிறார் ஹரி?
பேட்டி தொடர்பான ட்ரெய்லர் நேற்றே வெளியாகிவிட்டதால், இளவரசர் ஹரி என்ன பேசப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஆர்மாக உள்லார்கள்.
மற்றவர்கள் எப்படியோ, ஹரி என்ன குண்டு போடப்போகிறாரோ என ராஜ குடும்பம் இப்போதே பதற்றமடையத் துவங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
என்றாலும், ஹரி, தன் தந்தையான மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டபின் அவரை சந்தித்த நிலையில், அவரது உடல் நலம் குறித்து பேசப்போகிறாராம். அதிலும் சிக்கல் உள்ளது. காரணம், மன்னருக்கு என்ன புற்றுநோய் என இதுவரை அரண்மனை வட்டாரம் தெரிவிக்கவில்லை. ஹரி அதைப் போட்டு உடைப்பாரா என்பது தெரியவில்லை.
அத்துடன், தன் மனைவியான மேகனுடனான தனது வாழ்க்கை குறித்தும் ஹரி பேசப்போவதாக தொலைக்காட்சி விளம்பரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஹரியின் முந்தைய பேட்டியால் ஏற்கனவே ஹரி மீது கடுப்பிலிருக்கும் அவரது அண்ணன் வில்லியம் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |