பிள்ளைகள் விடயத்தில் இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் இடையில் கருத்துவேறுபாடு
இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் இடையில், தங்கள் பிள்ளைகள் விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாக ராஜகுடும்ப விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் பிள்ளைகளின் புகைப்படங்கள்
ஹரியின் மனைவியான மேகன், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டின் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.
Instagram/ @meghan
ஆனால், அப்படி தன் பிள்ளைகளுடைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதில் ஹரிக்கு உடன்பாடு இல்லை என அவருக்கு நெருக்கமான சிலரிடமிருந்து தான் அறிந்துகொண்டதாக ராஜகுடும்ப விமர்சகரான மார்க் டோலன் (Mark Dolan) என்பவர் தெரிவித்துள்ளார்.
தன் பிள்ளைகள் குறித்து சமூக ஊடகங்களில் பேசப்படுவதையே ஹரி விரும்பவில்லை என்று கூறியுள்ள மார்க், ஹரி புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த நிலையிலும், பிரபலமாவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |