மக்களுக்கு பிடித்த ராஜ குடும்பத்தினர் வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட இளவரசர் தம்பதி
மக்களுக்குப் பிடித்த ராஜ குடும்ப உறுப்பினர் வரிசையில் இளவரசர் ஹரி எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் ராஜ குடும்பத்திலேயே மிகப் பிரபலமானவர் என்ற நிலையிலிருந்த ஹரி இன்று தலைகுப்புற கவிழ்ந்திருக்கிறார்.
குறிப்பாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜ குடும்பத்தின் மீது ஹரியின் மனைவி சேற்றை வாறி இறைக்க, கூடவே ஒத்து ஊதினார் ஹரி. அது மக்களுக்குப் பிடிக்கவில்லை!
அது முதலே அவருக்கு மக்கள் மனதில் அவருக்கு சறுக்கல்தான்...
இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று ராஜ குடும்பத்தில் மிகவும் பிரபலமானவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
சந்தேகமேயில்லாமல் அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் பிரித்தானிய மகாராணியாரேதான்! அவருக்கு 80 சதவிகித ஆதரவு உள்ளது.
அடுத்த இடத்தைப் பிடிப்பவர் இளவரசர் வில்லியம், அவரைத் தொடர்ந்தபடியே வருபவர் பட்டியலிலும் கேட்தான்! அவர்களுக்கு முறையே 78, 75 சதவிகித ஆதரவு உள்ளது.
ஆனால் இதுவரை இல்லாத வகையில், ஹரிக்கு வெறும் 34 சதவிகித ஆதரவே உள்ளது. அங்கேயும் அவரை பின் தொடர்வது அவரது மனைவி மேகன், அவருக்கு வெறும் 26 சதவிகித ஆதரவே உள்ளது.
இதற்கிடயில், இந்த செய்தி ஹரிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.