இளவரசர் ஹரி மனைவி மேகனுக்கு £450,000 நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! வெளியான முழு பின்னணி
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரி-மேகன் மெர்க்கல் தம்பதி அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்மேகனை மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக ஹரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தவறு என்று சுட்டிக்காட்டியதோடு, மேகனுக்கு £450,000 நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.