இளவரசர் மைக்கேலின் மருமகன் திடீர் மரணம் - இரங்கல் தெரிவித்த மன்னர் சார்லஸ்
இளவரசர் மைக்கேலின் மகள் லேடி கேப்ரியல்லாவின் கணவரான தாமஸ் கிங்ஸ்டன் திடீரென்று உயிரிழந்துள்ளார்.
தாமஸ் கிங்ஸ்டன் மரணம்
மறைந்த எலிசபெத் ராணியாரின் முதல் உறவினர் இளவரசர் மைக்கேலின் மகளான லேடி கேப்ரியல்லாவின் கணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் 45 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குளோசெஸ்டர்ஷையரில் உள்ள ஒரு இடத்தில் இறந்துள்ளார்.
LADY GABRIELLA KINGSTON/ BUCKINGHAM PALACE
கிங்ஸ்டனுக்கு அவரது தந்தை மார்ட்டின் கிங்ஸ்டன் கே.சி, அவரது தாயார் ஜில் மேரி கிங்ஸ்டன் மற்றும் அவரது சகோதரிகள் ஜோனா கானோலி மற்றும் எம்மா முர்ரே ஆகியோர் உள்ளனர்.
இவரது மறைவானது முழு குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக அரண்மனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்படும் எனவும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் மற்றும் வேறு எந்த தரப்பினரும் இதில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் "மிகவும் இதயப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களை" அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |