பிரித்தானிய குட்டி இளவரசர் லூயிஸுக்கு தனியாக பரிமாறப்படும் கிறிஸ்துமஸ் விருந்து: வெளியான காரணம்
பிரித்தானிய ராஜகுடும்பத்தின் கிறிஸ்துமஸ் இரவு விருந்தில் குட்டி இளவரசர் லூயிஸ் உட்பட சிலருக்கு மூத்த உறுப்பினர்களுடன் விருந்து பரிமாறப்படுவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் விருந்து
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் ஒன்றாக கூடி கொண்டாடுவது தான் சிறப்பு. அந்தவகையில், பிரித்தானிய ராஜகுடும்பமும், கிறிஸ்துமஸ் அன்று இரவு விருந்தை மொத்த உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
@getty
ராணியார் காலமாகும் வரையில் ஒவ்வொரு ஆண்டும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அவரது தலைமையில் இரவு விருந்து கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும். 2019ல் மொத்தம் 70 பேர்கள் பக்கிங்ஹாம் அரண்மனை இரவு விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு, மன்னர் சார்லஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விருந்து முன்னெடுக்கப்பட இருக்கிறது. கிறிஸ்துமஸ் விருந்து கொண்டாட்டங்கள் ராஜகுடும்பத்தினரை பொறுத்தமட்டில் குடும்பத்தினர் ஒன்றிணையும் விழா என்பதால், புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
மட்டுமின்றி, இன்னொரு முக்கிய விடயமாக, ராஜகுடும்பத்து சிறுவர்கள், குட்டி இளவரசர் லூயிஸ் உட்பட அனைவரும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார்கள், ஆனால் இரவு விருந்தில் மூத்த உறுப்பினர்களுடன் அவர்களுக்கு விருந்து பரிமாறப்படுவதில்லை என கூறப்படுகிறது.
உணவு மேஜைகள் மொத்தம் 7
இது தொடர்பில், மன்னர் சார்லஸின் மருமகள் ஸாரா டிண்டாலின் கணவர் மைக் டிண்டால் தெரிவிக்கையில், கிறிஸ்துமஸ் விருந்தானது மொத்த உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு. பக்கிங்ஹாம் அரண்மனையை பொறுத்தமட்டில் உணவு மேஜைகள் மொத்தம் 7 எண்ணிக்கை தான் உள்ளது.
@royal
இரவு விருந்தில் மூத்த உறுப்பினர்கள் 70 பேர்கள் வரையில் கலந்துகொள்வதால் சிறார்களுக்கு தனியாக விருந்து பரிமாற வேண்டிய சூழல் என குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, சிறார்களுக்கு விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு என மட்டும் தனியாக பரிமாறப்படுகிறது என்றார் மைக் டிண்டால்.
இருப்பினும் இந்தமுறை குட்டி இளவரசர் லூயிஸ் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து முதன்முறையாக தேவாலயம் செல்ல இருக்கிறார்.
மேலும், ராணியார் மறைவுக்கு பின்னர் முதல் கிறிஸ்துமஸ் என்பதால், நாட்டுமக்களுக்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துரையை மன்னர் சார்லஸ் நிகழ்த்த இருக்கிறார்.