இளவரசர் வில்லியம் இவ்வளவு வருமானம் பெறுகிறாரா? வெளியான தனிப்பட்ட ஊதிய விவரம்
வேல்ஸ் இளவரசர் வில்லியம் Duchy of Cornwall நிறுவனத்திடம் 6 மில்லியன் பவுண்டுகள் பெற்றதாக ராயல் கணக்குகள் கூறுகின்றன.
Duchy வருமானம்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பு மற்றும் மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறிய பின்னர் இளவரசர் வில்லியம் Duchy நிலப்பரப்பைப் பெற்றார்.
தற்போது அவர் ஒவ்வொரு ஆண்டும் அதன் உபரி லாபத்திற்கு உரிமை பெற்றுள்ளார். 2022-23யில் Duchy 24.048 மில்லியன் பவுண்டுகள் லாபத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 1.02 மில்லியன் (23.024) அதிகமாகும்.
இந்த நிலையில் தான் சிம்மாசனத்தின் வாரிசாக முதல் ஆண்டில் வருடாந்திர அறிக்கையை வெளியிடாததற்காக வில்லியம் விமர்சிக்கப்பட்டார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவருக்காக பிரச்சாரம் செய்யும் குடியரசு, இளவரசரின் வருமானம் மற்றும் செலவை முழுமையாக தெரிவிக்குமாறும், அவரது Duchy வருமானத்தை நாடு முழுவதும் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கு வழங்குமாறும் அழைப்பு விடுத்தது.
அதிகரிக்கும் வில்லியமின் வருமானம்
இதனைத் தொடர்ந்து இந்த புள்ளி விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. குறிப்பாக, the Duchy of Cornwallயிடம் இருந்து மட்டும் வில்லியம் 6 மில்லியன் பவுண்டுகள் பெற்றதாக ராயல் கணக்குகள் காட்டுகின்றன. ஆனால் அடுத்த ஆண்டு 20 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் அவர் பெறலாம் என்று கூறப்படுகிறது.
Duchy 6.873 மில்லியன் பவுண்டுகள் வைத்திருந்த நிலையில், வில்லியம் 5.9 மில்லியன் பவுண்டுகள் வருமானத்துடன் இருந்தார். இதற்கிடையில், காலநிலை மாற்றத்தை கையாள்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மேலும் இந்த சவாலுக்கு பங்களிக்க எஸ்டேட்டின் முயற்சிகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன் என வில்லியம் கூறினார். அடுத்த ஆண்டு Duchyயின் லாபத்தில் முழுமையாக 24 மில்லியன் பவுண்டுகளை வில்லியம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |