இளவரசர் பிலிப்பின் மோசமான பக்கத்தை வெளியிடவிருக்கும் முக்கிய நிறுவனம்: கடும் அதிருப்தியில் அரண்மனை
இளவரசர் பிலிப்பின் மிக நெருங்கிய தோழியான Penny Knatchbull என்பவருடனே உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர் வெளியாவது மிகவும் கொடூரமான மனநிலை என ராணியாரின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் காட்டம்
அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான நெட்ஃபிக்ஸ் மறைந்த இளவரசர் பிலிப் தொடர்பில் வெளியிடவிருக்கும் தொடர் தற்போது அரண்மனை வட்டாரத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
நெட்ஃபிக்ஸ் ஊடகத்தில் கிரவுன் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறித்த தொடரில் ஒருபகுதியாக இளவரசர் பிலிப்பின் காதல் குறித்த காட்சிகள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
@maxmumby
இளவரசர் பிலிப்பின் மிக நெருங்கிய தோழியான Penny Knatchbull என்பவருடனே உறவு இருந்ததாக கூறப்படுகிறது. நெட்ஃபிக்ஸ் ஊடகத்திலேயே மிகவும் பிரபலமான கிரவுன் தொடரின் அடுத்த பாகம் நவம்பர் 9ம் திகதி வெளிவர இருக்கிறது.
இதில் இளவரசர் பிலிப் தொடர்பில் வெளிவரும் காட்சிகள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. ராணியார் காலமானதன் பின்னர் மிக குறுகிய நாட்களிலேயே அவரது கணவர் இளவரசர் பிலிப் தொடர்பில் முகம் சுழிக்கும் காட்சிகள் இடம்பெறும் தொடர் வெளியாவது மிகவும் கொடூரமான மனநிலை என ராணியாரின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் காட்டமாக பேசியுள்ளார்.
@shutterstock
இளவரசர் பிலிப்புக்கு 30 வயது இளையவரான Penny Knatchbull மொத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். தற்போது 69 வயதாகும் பென்னி, இளவரசர் பிலிப்பின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டாவது பெண்மணி என்றே கூறப்படுகிறது.
மேலும், இளவரசர் பிலிப் காலமானபோது அவரது இறுதிச்சடங்குகளுக்கு பென்னி மட்டுமே ராஜகுடும்பத்தவர் அல்லாத நபராக அழைக்கப்பட்டிருந்தார். ராணியாரின் இறுதிச்சடங்குகளிலும் பென்னி அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@dunlea