இளவரசர் பிலிப் மற்றும் பென்னி இடையிலான தவறான காட்சிகள்: கொடூரமான குப்பை என ராணியின் செயலாளர் கண்டனம்
இளவரசர் பிலிப்-பின் காட்சிகள் குறித்த தகவலால் Netflix நிறுவனத்திற்கு சிக்கல்.
இளவரசர் பிலிப் குறித்து வெளிவந்துள்ள செய்தி கொடூரமான குப்பை என ராணியின் முன்னாள் பத்திரிகை செயலாளர் கருத்து.
அரச குடும்பம் தொடர்பான “தி கிரவுன்” என்ற இணைய தொடரில், மறைந்த இளவரசர் பிலிப் குறித்து தவறான கருத்துக்கள் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் அவரது நெருங்கிய நண்பர் பென்னி நாட்ச்புல்லுடனான (Penny Knatchbull) நெருக்கமான உறவு குறித்த தவறான காட்சிகளை நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் “தி கிரவுன்” நிகழ்ச்சி காண்பிக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
getty
மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி உயிரிழந்த பிறகு வெளிவந்துள்ள இந்த செய்தி மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக சிலரால் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ராணியின் முன்னாள் பத்திரிகை செயலாளர் டிக்கி ஆர்பிட்டர் சன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த கருத்தில், இளவரசர் பிலிப் குறித்து வெளிவந்துள்ள செய்தி "கொடூரமான குப்பை" என விமர்சித்துள்ளார்.
Alpha press
இந்நிலையில் “தி கிரவுன்” தொடரில் இளவரசர் பிலிப்பின் காட்சிகள் தொடர்பாக வெளிவந்துள்ள தகவலால் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் ஹரி மற்றும் மேகன், சொந்த கருத்துகளிலேயே முரண்பாடு: குழம்பி நிற்கும் Netflix அதிகாரிகள்
இளவரசர் பிலிப் கடந்த 2021 ம் வருடம் செப்டம்பரில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PA