99 வயதிலும் கட்டுக்கோப்பாக இருந்த இளவரசர் பிலிப்: பின்னணியில் ஒரு கனேடியர்...
பிரித்தானிய இளவரசர் பிலிப் 99 வயது வரையிலும் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டிருந்ததன் பின்னணியில் ஒரு கனேடியர் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவின் Saskatoonஐச் சேர்ந்த William Orban என்பவர் உருவாக்கிய, 5BX என்னும் 11 நிமிட உடற்பயிற்சித் திட்டம், உலகமெங்கும் பெருமளவில் வரவேற்பைப் பெற்ற ஒரு திட்டமாகும்.
அந்த திட்டத்துக்கு இளவசர் பிலிப் பெரிய ரசிகர் என அரண்மனை வட்டாரமே தெரிவித்துள்ளதாக கூறுகிறார், William Orbanஇன் மகனான Bill Orban. இளவரசர் பிலிப் தன்னை ஒரு முறை தொடர்புகொண்டதாகவும், சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டதாகவும் William தெரிவித்ததாக அவரது மகன் குறிப்பிடுகிறார்.
அதன் பிறகு, இந்த திட்டம் வெளியானதிலிருந்து, வாழ்வின் கடைசி பகுதிவரை தொடர்ந்து அதே முறையில் உடற்பயிற்சிகளை இளவரசர் பிலிப் மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கிறார் Bill.
செய்வதற்கு வசதியாக இருந்த அந்த உடற்பயிற்சிகளை, வாரத்திற்கு ஐந்து நாட்கள் இளவரசர் பிலிப் செய்துவந்ததாக Bill தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப், தான் சொன்னதை தானே பின்பற்றியவர் என்று கூறும் Bill, தினமும் அவர் ஜாகிங் மற்றும் வாக்கிங் செய்துவந்ததாக குறிப்பிடுகிறார்.
வீடியோவை காண - https://globalnews.ca/news/7779134/saskatoon-prince-philip-exercise/