இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது பக்கிங்காம் அரண்மனை
இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேர் அடங்கிய பட்டியலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப்(99) ஏப்ரல் 9ம் திகதி வின்ட்சர் கோட்டையில் காலமானார்.
ஏப்ரல் 17ம் திகதி இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடக்கவிருக்கும் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கை பிபிசி மற்றும் ஐடிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவுள்ளன.
இந்த சனிக்கிழமை இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் 30 பேர் அடங்கிய முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மகாராணி, வேல்ஸ் இளவரசர், இளவரசர் சார்லஸ், கார்ன்வால் டச்சஸ், கமிலா, கேம்பிரிட்ஜ் டியூக் இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ஜ் டச்சஸ் கேத்தரின், சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹரி, யார்க் டியூக் ஆண்ட்ரூ, இளவரசி பீட்ரைஸ், எடோர்டோ மாபெல்லி மோஸி, இளவரசி யூஜெனி, ஜாக் ப்ரூக்ஸ் பேங்க், வெசெக்ஸின் ஏர்ல், வெசெக்ஸின் கவுண்டஸ், லேடி லூயிஸ் வின்ட்சர், விஸ்கவுண்ட் செவர்ன்.
இளவரசி ராயல், வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸ், பீட்டர் பிலிப்ஸ், ஜாரா பிலிப்ஸ், மைக் டிண்டால், ஸ்னோடனின் ஏர்ல், லேடி சாரா சாட்டோ, டேனியல் சாட்டோ, க்ளூசெஸ்டர் டியூக், டியூக் ஆஃப் கென்ட், இளவரசி அலெக்ஸாண்ட்ரா, பெர்ன்ஹார்ட், பேடனின் பரம்பரை இளவரசர், இளவரசர் டொனாட்டஸ், ஹெஸ்ஸின் லேண்ட் கிரேவ், ஹோஹென்லோஹே-லாங்கன்பேர்க்கின் இளவரசர் பிலிப், பர்மாவின் கவுண்டஸ் மவுண்ட்பேட்டன்.