மூன்று பேருக்கு தனது சொத்தில் உயில் எழுதி வைத்துள்ள பிரித்தானிய இளவரசர் பிலிப்
பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், தனது உயிலில் மூன்று பேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ள விடயம் வெளியாகியுள்ளது.
இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு 30 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மை பிலிப்பின் மனைவியான மகாராணியாருக்குத்தான் செல்லும்.
அதுபோக, தனக்கு நெருக்கமான மூவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தனது உயிலில் எழுதிவைத்துள்ளாராம் பிலிப். அவர்கள், இளவரசர் பிலிப்பின் உதவியாளர்களான Brigadier Archie Miller Bakewell, William Henderson மற்றும் Stephen Niedojadlo என்பவர்கள்தான். இந்த மூவருமே இளவரசர் பிலிப்பின் இறுதிக் காலத்தில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் ஆவர்.
ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பிலிப் செல்ல முடியாத சூழ்நிலை வரும்போது, அவருக்கு பதில் Bakewell அந்த இடத்துக்குச் சென்று ஆகவேண்டியதை கவனிப்பாராம்.
இளவரசர் பிலிப் Sandringham எஸ்டேட்டில் தங்கும்போது, Hendersonம் Niedojadioவும் ஒருவர் மாறி மற்றவர் அவருடன் இருந்துகொண்டே இருப்பார்களாம். Windsor மாளிகையில் இளவரசர் பிலிப் இருந்தபோது, கடைசி இரண்டு நாட்கள் அவருடன் இருந்தவர் Henderson என்பது குறிப்பிடத்தக்கது.