மன்னர் சார்லசின் தந்தை கடைசியாக அவரிடம் பேசிய வார்த்தைகள்: குறும்பு கொஞ்சமும் குறையவில்லையாம்
மன்னர் சார்லசின் தந்தையும், மறைந்த மகாராணி எலிசபெத்தின் கணவருமான இளவரசர் பிலிப், எப்போதுமே நகைச்சுவையுடன் பேசுபவர் என்பது உலகறிந்த விடயம்.
கடைசியாக மகனிடம் பேசிய வார்த்தைகள்
இந்நிலையில், இளவரசர் பிலிப் தன் மகனான சார்லசிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Image: Getty Images
இளவரசர் பிலிப் உடல் நலம் பாதிக்கப்பட்டு விண்ட்ஸர் மாளிகையில் இருந்த நேரம் அது. அப்போது சார்லஸ் தன் தந்தையை தொலைபேசியில் அழைத்து, உங்கள் 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள் என்று கேட்டாராம்.
சமீபத்தில், மன்னர் சார்லஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது தந்தையின் 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாட ஒரு பார்ட்டி வைக்கலாம் என்று அவரிடம் கூறினாராம். இது நிகழ்ந்தது, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி.
Image: WPA Pool/Getty Images
இளவரசர் பிலிப்பின் குறும்பு கொப்புளிக்கும் பதில்
இளவரசர் பிலிப்பின் கேட்கும் திறன் சற்று குறைந்திருந்ததால், சற்று சத்தமாக சார்லஸ் அவரிடம், உங்கள் பிறந்தநாளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம், ஒரு ரிசப்ஷன் வைக்கலாம் என திட்டம் உள்ளது என்று கூற, ஒரு கணம் கூட யோசிக்காத பிலிப், உடனே, அதற்கு நான் உயிரோடு இருக்கவேண்டும் இல்லையா என்றாராம் குறும்பு கொப்புளிக்கும் குரலில்!
நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள் என்று நினைத்தேன் என்றாராம் சார்லஸ். ஏப்ரலில் இளவரசர் பிலிப் மரணமடையும் முன், தன்னிடம் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள் இவை என பிபிசி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ். அந்த பேட்டி, அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |