பிரித்தானியா இளவரசர் பிலிப் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்! எப்படி இருக்கிறார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை
பிரித்தானியா இளவரசர் பிலிப் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
99 வயதான இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் பிலிப் இன்று கிங் எட்வர்ட் VII மருத்துவமனையிலிருந்து St Bartholomew'sமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்கள், அத்துடன் ஏற்கனவே இருக்கும் இதய பிரச்சினைக்கு பரிசோதனை மற்றும் அவதானிப்பை மேற்கொள்வார்கள்.
இளசரசர் நலமாக இருக்கிறார் மற்றும் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார், ஆனால் வாரத்தின் இறுதி வரை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.