நெய்மருக்காக சொந்த விமானத்தையே அனுப்பி வைத்த சவுதி இளவரசர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நெய்மரை அழைத்துவர சொந்த விமானத்தையே அனுப்பி வைத்துள்ளார் சவுதி அரேபியா இளவரசர்.
அல் ஹிலால் அணியுடனான ஒப்பந்தம்
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணியுடனான ஒப்பந்தம் முடிவான நிலையில், பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் வெள்ளிக்கிழமை பாரிஸ் நகரில் இருந்து ரியாத் நகரில் வந்திறங்கினார்.
Credit: Adam Nurkiewicz
இதனையடுத்து வெளியான காணொளி பதிவு ஒன்றில், தனியார் விமானம் ஒன்றின் அருகே நெய்மர் ஊடகங்களுக்கு வாய்ப்பளித்தபடி காணப்பட்டார். அதில், நாம் ரியாத் நகருக்கு புறப்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் அல் வலீத் பின் தலால்
இந்த நிலையில், நெய்மரை அழைத்து வந்த அந்த விமானம் இளவரசர் அல் வலீத் பின் தலால் என்பவருக்கு சொந்தமானது எனவும், அதன் மதிப்பு 500 மில்லியன் டொலர் எனவும், நெய்மரை அழைத்துவர இளவரசர் தமது விமானத்தை அனுப்பி வைத்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது.
اهـلاً وسـهلاً #نيمــار - Welcome #NeymarJr#نيمار_هلالي@Alhilal_FC@Fahad_Alotaibi_@neymarjr https://t.co/vRcY7P1obA pic.twitter.com/EgkjMkLaZQ
— الوليد بن طلال (@Alwaleed_Talal) August 15, 2023
மேலும் நெய்மர் சவுதி அரேபியாவில் தரையிறங்கியதும், இளவரசர் அல் வலீத் பின் தலால் காணொளி அழைப்பினூடே நெய்மரை தொடர்பு கொண்டு வரவேற்றிருந்தார்.
அல் ஹிலால் அணி நிர்வாகம் சுமார் 90 மில்லியன் யூரோ தொகைக்கு நெய்மரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆண்டுக்கு 164 மில்லியன் டொலர் தொகையை அவர் ஊதியமாக ஈட்ட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |