சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர்
Prince William and Princess Catherine plays cricket with cricket legend Sachin Tendulkar: இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட்டும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரித்தானிய இளவரசரும், வருங்கால மன்னருமான வில்லியமும், அவரது மனைவியான கேட்டும் இந்தியா சென்றுள்ளார்கள்.
எர்த் ஷாட் விருதுகள் என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சிகாக அவர்கள் இந்தியா சென்றுள்ளார்கள்.
சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட்
இந்நிலையில், மும்பை நகரில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்கள் இளவரசர் வில்லியமும் கேட்டும்.

பாரம்பரிய முறையில் மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட வில்லியம் கேட் தம்பதியர், ஆலமரம் ஒன்றின் கீழ் அமைந்துள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தியுள்ளார்கள்.
பின்னர், இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இணைந்து, மும்பையின் தெருக்களில் மாணவியரோடு கிரிக்கெட் விளையாடியுள்ளார்கள்.
Prince William, Princess Catherine of Wales along with Sachin Tendulkar play Gully cricket with youth at Ballard Estate in Mumbai on Monday, November 16, 2026. The couple arrived in Mumbai to attend the annual Earthshot Prize awards, marking the Princess of Wales’ most high-profile overseas visit since undergoing treatment for cancer in 2024. Video: @EmmanualYogini
— The Hindu (@the_hindu) November 16, 2026
நவம்பர் மாதம் 16ஆம் திகதி, ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்று மட்டும் ஆசிரியைகள் தங்களிடம் கூறியதாக தெரிவிக்கும் மாணவிகள், தாங்கள் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடுவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

அதாவது, பாதுகாப்பு கருதி, வில்லியம் கேட் தம்பதியரின் பயணத் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இது, வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்கு வருகை புரியும் இரண்டாவது அதிகாரப்பூர்வ நிகழ்வாகும். ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தம்பதியர் இந்தியாவுக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.