பிரான்சில் பிரித்தானியாவின் வருங்கால மன்னரை புகழ்ந்த ட்ரம்ப்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமை இரண்டாவது முறையாக சந்தித்த ட்ரம்ப், அவரை மனதார புகழ்ந்துள்ளார்.
பிரித்தானியாவின் வருங்கால மன்னரை புகழ்ந்த ட்ரம்ப்
பிரான்சின் புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயத் திறப்பு விழாவுக்காக பாரீஸ் சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியமும், அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பும் இரண்டாவது முறையாக சந்தித்துக்கொண்டார்கள்.
அந்த சந்திப்பு, சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டாலும், அவர்களுடைய உரையாடலில் அமெரிக்க பிரித்தானிய உறவு குறித்த விடயமே முக்கியமாக இடம்பெற்றது.
தன்னுடன் கைகுலுக்கிய வில்லியமுடைய தோளைத் தட்டிக்கொடுத்த ட்ரம்ப், இவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறியதுடன், வில்லியம் தனது வேலையை அருமையாகச் செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், மறைந்த எலிசபெத் மகாராணியாருடன் அளவளாவியதைக் குறித்த இனிமையான நினைவுகளையும் வில்லியமுடன் ட்ரம்ப் பகிர்ந்துகொண்டதாகவும் கென்சிங்டன் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |