முதன்முறையாக புகைப்படங்களில் நெருக்கம் காட்டிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதி: காரணம் இதுதான்
திருமணத்துக்குப் பின் பெரும்பாலும் பொது இடங்களில் இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் நெருக்கம் காட்டும் புகைப்படங்களைப் பார்ப்பது அரிது.
கணவன் மனைவியாக இருந்தும், முத்தமிட்டுக்கொண்டால்கூட, இரு நாட்டுத் தலைவர்கள் முத்தமிட்டுக்கொள்வதுபோலத்தான் இருவரும் எட்ட நின்றுதான் முத்தமிட்டுக்கொள்ளும் வில்லியம் கேட் ஜோடி.
ஆனால், முதன்முறையாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களில் வில்லியமும் கேட்டும் நெருக்கம் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
முதன்முறையாக நெருக்கம் காட்டிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதி
வில்லியம், தன் மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டு காதலுடன் வருடுவதும், கேட்டின் கை மீது தலை வைத்து படுத்துக்கொள்வதும், கணவர் மார்பில் கேட் சாய்ந்துகொள்வதும், கன்னத்தில் முத்தமிடுவதுமாக, காதல் மழை பொழியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளவரசி கேட்.
அந்த வீடியோ, தனது கீமோதெரபி சிகிச்சை முடிந்துவிட்டது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக கேட் வெளியிட்டுள்ள வீடியோ.
தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளது என்பதைக் கூற, தனிமையில் அமர்ந்தபடி கேட் பேசும் காட்சி அடங்கிய வீடியோ, கலக்கத்தை உருவாக்குவதாக அமைந்திருந்தது. ஆனால், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கேட், வில்லியம் தம்பதியருடன் அவர்களுடைய பிள்ளைகளும் இணைந்துகொண்டுள்ளார்கள்.
அது அந்தக் குடும்பம் தங்கள் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு வீடியோ. கேட்டுக்கு புற்றுநோய் என்பதும் உடைந்துபோன வில்லியம், தன் மனைவி சிகிச்சையில் ஒரு முக்கிய கட்டத்தை தாண்டிவிட்டார் என்பதை அறிந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ அது.
தங்கள் தாய்க்கு என்ன ஆகுமோ என பயந்துபோயிருந்த அந்த சின்னஞ்சிறு குழந்தைகள், அம்மாவுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது என்பதை அறிந்து தங்கள் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும் வீடியோ அது.
நிச்சயம், அந்த வீடியோவைப் பார்க்கும் ராஜ குடும்ப ரசிகர்களை, அந்த வீடியோ மகிழவும் நெகிழவும் வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |