துருக்கி, சிரியாவில் இருந்து வரும் பயங்கரமான படங்களைக் கண்டு திகிலடைந்துள்ளோம்! பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் கமிலாவுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி நிவாரண உதவி அளித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 21000
பூகம்ப பேரழிவால் துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 21,000ஐத் தூண்டியுள்ளது. உலக நாடுகள் பலவும் பாதிப்புக்குள்ளான இரு நாடுகளுக்கும் உதவி வருகின்றன.
இந்த நிலையில் துருக்கியில் உள்ள பிரித்தானிய மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி-சிரியாவுக்கு நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோர், மன்னர் சார்லஸ் மற்றும் கமிலாவுடன் இணைந்து நிவாரண நிதி அளித்துள்ளனர்.
இது அவர்கள் தனிப்பட்ட முறையில் அளித்த உதவி ஆகும். அரண்மனை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், இந்த நன்கொடை எவ்வளவு என்பது தெரியவில்லை.
வில்லியம்-கேட் வேதனை
நிலநடுக்கத்தால் மக்கள் பலியானது குறித்து வேதனை தெரிவித்த வில்லியம் மற்றும் கேட் வெளியிட்ட பதிவில், 'இந்த வாரம் நிலநடுக்கங்களுக்குப் பிறகு துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வரும் பயங்கரமான பாடங்களைக் கண்டு நாங்கள் திகிலடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் உள்ளன. மேலும் தரையில் பதிலுக்கு உதவும் பேரிடர் அவசர குழுவின் பிரச்சாரத்தை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என கூறியுள்ளனர்.
இதற்கிடையில் பிரித்தானியா முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்கள், நிலநடுக்கம் தாக்கியதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவில் இணைந்தனர்.