இளவரசர் வில்லியமுக்கு திடீரென ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை: வெளியான வீடியோ
பிரித்தானிய இளவரசர் வில்லியம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வட அயர்லாந்துக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தர்மசங்கடமான ஒரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
இளவரசர் வில்லியம், நேற்று மதியம், வட அயர்லாந்திலுள்ள Ulster பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார்.
ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், தர்மசங்கடமான நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆம், திடீரென அங்கு கூடியிருந்த மாணவ மாணவியர் வில்லியமுக்கு எதிராக ஊளையிடவும் சத்தமிடவும் துவங்கினார்கள்.
A less than warm reaction to Prince William as he departs @UlsterUni in Belfast this afternoon. @BelTel pic.twitter.com/jTJ2cLmUri
— Kurtis Reid (@kurtisreid_) November 14, 2024
வருங்கால மன்னரான வில்லியம், பாலஸ்தீனியம் மற்றும் காசா தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அந்த மாணவர்கள் குரல் எழுப்பினார்கள்.
ஆனால், எதிர்பாராமல் விரும்பத்தகாத ஒரு சூழலை எதிர்கொண்டாலும், புன்னகைத்தபடியே, மக்களைப் பார்த்து கையசைத்தபடி, நிகழ்ச்சி நடக்கும் கட்டிடத்துக்குள் சென்றுவிட்டார் வில்லியம்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக ஊடகமான எக்ஸில் பகிரப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |