அச்சத்தை உருவாக்கிவரும் இளவரசர் வில்லியம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
Prince William is causing increasing alarm at the Palace: இளவரசர் வில்லியமுடைய நடவடிக்கைகளால் அரண்மனையில் அச்சம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
இளவரசர் வில்லியமுடைய நடவடிக்கைகள் அரண்மனையில் அச்சத்தை உருவாக்கிவருவதாக, பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
அச்சத்தை உருவாக்கிவரும் இளவரசர் வில்லியம்
பிரித்தானியாவைப் பொருத்தவரை, மன்னராக இருக்கும் நபர் உயிரிழந்தால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த விடயங்கள், முன்கூட்டியே ஆலோசிக்கப்படும் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

அவ்வகையில், இப்போது மன்னராக இருக்கும் சார்லசுக்குப் பின், அவரது மூத்த மகனான இளவரசர் வில்லியம் மன்னராவார். அவருக்குப் பின், அவரது மூத்த மகனான ஜார்ஜ் மன்னராவார். இதுதான் மரபு !
இந்நிலையில், இளவரசர் வில்லியம் செய்யும் ஒரு செயல் மரபுக்கு எதிராக, மன்னராட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதாவது, ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அடுத்தடுத்து மன்னராக ஆக இருப்பவர்கள் ஒரே விமானத்தில் பயணிக்கக்கூடாது.
தெளிவாகக் கூறினால், இளவரசர் வில்லியமும், அவரது மூத்த மகனான ஜார்ஜும் ஒரே விமானத்தில் பறக்கக்கூடாது.
ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், வெளிப்படையாகக் கூறினால், விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டால், பிரித்தானியாவை ஆளவேண்டிய இரண்டு தலைமுறை மன்னர்களை பிரித்தானியா இழக்க நேரிடும்.
ஆனால், இளவரசர் வில்லியம் தன் குடும்பத்துடன் மிகவும் நெருக்கம் காட்டுவதால், அதுவும், தன் மூத்த மகனான இளவரசர் ஜார்ஜுடன் அதிக நெருக்கம் காட்டுவதால், அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே விமானத்திலேயே பயணிக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, இளவரசர் வில்லியம் ஹெலிகொப்டர் பைலட் பயிற்சி பெற்றவர் என்பதால், தன் குடும்பத்தை ஹெலிகொப்டரில் ஏற்றிக்கொண்டு பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே, மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், ஹெலிகொப்டர் பயணங்கள் ஆபத்தானவை என்று கூறி, குடும்பமாக சேர்ந்து ஹெலிகொப்டரில் பறப்பது குறித்து வில்லியமை எச்சரித்துள்ளார்.
அப்படி இருந்தும், வில்லியம் ஹெலிகொப்டரில் தன் குடும்பத்துடன் பயணிப்பதை நிறுத்தாததால், மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்படி குடும்பத்துடன் ஒரே ஹெலிகொப்டரில் பயணிப்பதால் ஏற்படும் அபாயங்களை தான் உணர்ந்திருப்பதாகக் கூறும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் மன்னர் சார்லஸ், வில்லியமை கையெழுத்திட வைத்துள்ளாராம்.
இதற்கிடையில், ரிச்சர்ட் ஈடன் என்னும் ராஜ குடும்ப நிபுணர், ஒருவேளை இப்படி சேர்ந்து பயணிக்கும்போது வில்லியம் குடும்பத்துக்கு ஏதாவது ஆகிவிட்டால், அடுத்து இளவரசர் ஹரிதான் மன்னராவார் என்பதை நினைவில் கொள்வது நல்லது என்கிறார்.
ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குக் கொண்டு வந்த பெரும் அவமானத்துக்குப் பிறகு, ஹரி பிரித்தானியாவின் மன்னர், மேகன் ராணி என எண்ணிப்பார்க்கமுடியுமா என கேள்வி எழுப்பும் ஏடன், அப்படி ஒரு நிலை வந்தால், தீவிர மன்னராட்சி ஆதரவாளர்கள் கூட மன்னராட்சி வேண்டாம், மக்களாட்சியே போதும் என்று முடிவெடுத்துவிடுவார்கள் என்கிறார்!