இளவரசர் வில்லியம் ஏமாற்றிவிட்டார்... கேட் அதிர்ச்சி: ஒரு சுவாரஸ்ய செய்தி!
இளவரசர் வில்லியம் தன்னை ஏமாற்றியதால் அதிர்ச்சியடைந்தார் இளவரசி கேட்.
இந்த சுவாரஸ்ய சம்பவம் வட அயர்லாந்தில் நிகழ்ந்தது.
வேல்ஸ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான இளவரசி கேட்டும் வட அயர்லாந்துக்குச் சென்றிருந்தார்கள்.
அப்போது தன்னை தன் கணவர் ஏமாற்றியதைக் கண்ட கேட் அதிர்ச்சியடைந்தார்.
அதாவது, விடயம் பெரிதாக ஒன்றுமில்லை, மகாராணியாரின் மறைவுக்குப் பிறகு, இப்போதுதான் ராஜகுடும்பம் சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.
தங்கள் கடமைகளைச் செய்யத் துவங்கியுள்ளார்கள் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள்.
அவ்வகையில், வட அயர்லாந்தின் தலைநகரான Belfastக்கு தொழில் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக இளவரசர் வில்லியமும் கேட்டும் சென்றிருந்தார்கள்.

Picture: Reuters
அப்போது, யார் வேகமாக மதுபானம் ஒன்றை வேகமாக குடிப்பதற்காக தயார் செய்வது என்னும் சவாலை வில்லியமும் கேட்டும் ஏற்றுக்கொண்டார்கள்.
வேகவேகமாக பானங்களை தயார் செய்தார்கள் இருவரும். வில்லியம் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தார்கள்.
ஆனால், விசில் ஒலிப்பதற்கு முன்பே வில்லியம் போட்டியைத் துவங்கிவிட்டதாக கேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வில்லியம் ஏமாற்றி ஜெயித்து விட்டதாக அதிர்ச்சியடைந்தார் அவர்.

Picture: Reuters

Picture: Reuters

Picture: Reuters

Picture: Reuters