இளவரசர் ஹரியை அணுகி பேசிய வில்லியம்! முடிவுக்கு வரும் சகோதர சண்டை
இளவரசர் வில்லியம் இறுதியாக இளவரசர் ஹரியை அணுகி இருவருக்கும் இடையிலான பிளவைக் குணப்படுத்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸுக்கு முன்னதாக தங்கள் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர இளவரசர் வில்லியமின் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை இளவரசர் ஹாரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு அரச குடும்பத்திற்கு இது முதல் கிறிஸ்துமஸ் ஆகும்.
கேட் மிடில்டனின் ஆலோசனை
WireImage
தகவலின்படி, வில்லியம் தனது மனைவி இளவரசி கேட் மிடில்டனின் ஆலோசனையின் பேரில் ஹரியைத் தொடர்பு கொண்டார்.
வில்லியம் ஹரியுடன் பேச விரும்பியதாகவும், ஆனால் அவர்களது உரையாடல்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் ஹரி கையெழுத்திட வேண்டும் என விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
REUTERS/Peter Nicholls
இளவரசர் வில்லியம் அடுத்த மாதம் கேட் மிடில்டனுடன் அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் இப்போது ஹரியை அணுகியுள்ளார்.
அமெரிக்க பயணத்தின்போது, வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் இருவரும் நியூயார்க்கில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதியை சந்திக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.