இளவரசர் வில்லியமின் முடிவால் மனமுடைந்த கேட்? வெளியான தகவல்
வேல்ஸ் இளவரசர் வில்லியம், தனது மகனின் படிப்பு குறித்து எடுத்த முடிவால் கேட் மிடில்டன் மனம் உடைந்ததாக தெரிய வந்துள்ளது.
பெண்கள் பள்ளியை வெறுத்த கேட்
கடந்த மாதம் இரண்டாவது முறையாக கேட் தனது கணவர் மற்றும் மகனுடன் Co-Educational பள்ளிக்கு சென்றார்.
Pool/Samir Hussein/WireImage
அவர் Eton போன்ற ஒற்றை பாலின பள்ளிகளின் ரசிகராக இல்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு காரணம் Downe Houseயில் உள்ள பெண்கள் பள்ளியில், அவர் தனது காலத்தில் கொடுமைப்படுத்துபவர்களால் குறிவைக்கப்பட்டது தான் என்று கூறப்படுகிறது.
வில்லியம் எடுத்த முடிவு
இந்த நிலையில் 13 வயதை எட்டும்போது ஜார்ஜை, இளவரசர் வில்லியம் Eton பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் இளவரசி கேட் மிடில்டன் மனம் உடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள Gordonstoun-க்கு பதிலாக வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர், முதன் முதலில் Eton பள்ளியில் படித்தவர்கள்.
Getty images
ஆனாலும், அரச குழந்தைகள் உறைவிடப் பள்ளிகளில் சேருவது நீண்ட காலமாக பாரம்பரியமாக இருந்து வருகிறது.
கேட் மற்றும் வில்லியம் இருவரும் தங்கள் குழந்தைகளின் படிப்பு தொடர்பில் வாதிட்டனர். இறுதியில் வில்லியம் வாதத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |