கேட் குடும்பம் மீது இளவரசர் வில்லியம் காட்டிய அதீத ஆர்வம்... குழப்பமடைந்த ஹரி: ராஜ குடும்ப எழுத்தாளர் தகவல்
இளவரசர் வில்லியமுக்கும் கேட்டுக்கும் திருமணம் ஆனதுமே, வில்லியம் தன் மனைவி குடும்பம் பக்கம் சாய்ந்துவிட்டதாகவும், தன் மனைவி குடும்பம் மீது எதனால் வில்லியம் இந்த அளவுக்கு வில்லியம் ஆர்வம் காட்டுகிறார் என்று புரியாமல் இளவரசர் ஹரி குழப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர்.
திருமணம் ஆனதும் மனைவி வீட்டுப்பக்கம் சாய்ந்த வில்லியம்
இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையே உருவாகியுள்ள பிளவு இப்போது ஏற்பட்டது அல்ல, வில்லியமுக்கு திருமணமானதுமே பிரச்சினை உருவாகிவிட்டது என ராஜ குடும்ப முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Tina Brown என்பவர்.
ஒரு அக்கா இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்தவர் என் அண்ணி கேட்தான் என இளவரசர் ஹரி கூறியதுண்டு.
ஆனால், வில்லியமுக்கும் கேட்டுக்கும் திருமணம் ஆனதுமே வில்லியம் தன் மனைவி குடும்பம் பக்கம் சாய்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார் Tina Brown.
Chris Jackson / Getty Images
வில்லியம் முழுமையாக கேட் குடும்பத்தினர் பக்கம் சாய, ஹரி அப்போதே தனிமையாக உணரத் துவங்கிவிட்டதாகவும், குட்டி இளவரசி சார்லட் பிறந்தபிறகோ, வில்லியம் தன் திருமண வாழ்வு, புதிய குடும்பம் என மாறிவிட, சகோதரர்களுக்குள்ளான உறவில் அப்போதே மாற்றம் ஏற்படத்துவங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார் Tina Brown.
குழப்பமடைந்த இளவரசர் ஹரி
அண்னனும் தம்பியும் அவ்வளவு நெருக்கமாக இருந்த நிலையில், திருமணமானதும் எதனால் அண்ணன் வில்லியம் இந்த அளவுக்கு வில்லியம் ஆர்வம் காட்டுகிறார் என்று புரியாமல் இளவரசர் ஹரி குழப்பமடைந்ததாக தெரிவிக்கிறார் Tina Brown.
AFP
இளவரசர் ஹரி குறும்புக்கார இளைஞராக பார்ட்டிகளில் பங்கேற்றுக்கொண்டிருக்க, அது மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என்று எண்ணிய இளவரசர் வில்லியமுக்கு தம்பியின் இந்த போக்கு பிடிக்கவில்லை.
மேலும், சார்லஸ் டயானா உறவில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வில்லியம் வாழ்வில் ஒரு நிலையில்லாத்தன்மையை அனுபவித்துக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் கேட்டின் குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொண்டதால், அதற்கு தான் நன்றியுடையவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் வில்லியமுக்கு உருவானதாக கூறுகிறார் Tina Brown.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |