கோட்டைக்கு போக விரும்பும் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர்
பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, ராஜ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு வீடு தொடர்புபடுத்தி பிரபலமாக பேசப்படும்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தைப் பொருத்தவரை, அவருக்கு தனது விண்ட்ஸர் எஸ்டேட் மீது விருப்பம் அதிகம்.
அதேபோல, இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரும் ஒரு பிரம்மாண்ட வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார்களாம்.
கோட்டைக்கு போக விரும்பும் வில்லியம் கேட் தம்பதியர்
மகாராணியாரின் விண்ட்ஸர் எஸ்டேட்டிலேயே மற்றொரு கட்டிடம் உள்ளது.
அதன் பெயர் Belvedere கோட்டை. சுருக்கமாக, அது கோட்டை என்றே அழைக்கப்படுகிறதாம்.
ஆக, இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மற்றும் பிள்ளைகளுடன் அந்த கோட்டைக்குச் செல்ல திட்டமிட்டுவருவதாக The Mail on Sunday என்னும் ஊடகம் தெரிவித்துள்ளது.
வில்லியம் தம்பதியர் தற்போது வாழ்ந்துவரும் Adelaide Cottage என்னும் வீட்டைவிட இந்த கோட்டை மிகப் பெரியதாகும்.
இந்த வீட்டைக் குறித்து இரண்டு சுவாரஸ்யமான விடயங்களைக் கூறலாம்.
ஒன்று, Belvedere கோட்டை கட்டப்பட்டதே இளவரசர் வில்லியம் அகஸ்டஸ் என்னும் ஒரு இளவரசருக்காகத்தான். அந்தக் கோட்டை, 1750க்கும் 1755க்கும் இடையில் கட்டப்பட்டது.
இன்னொரு விடயம், இந்த கோட்டையில்தான் வேல்ஸ் இளவரசராக இருந்து பின் மன்னரான இளவரசர் எட்வர்ட் வாழ்ந்துவந்தார். பல மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து அவர் அந்த கோட்டையைப் புதுப்பித்திருந்தார்.
அவர் மன்னரானபோது, இரண்டு முறை விதவையான அமெரிக்கப் பெண்ணான வாலிஸ் சிம்ஸன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் தனது பதவியைத் துறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |