சர்ச்சைக்குரிய நபருடன் ஒரே காரில் பயணித்த வில்லியம் கேட் தம்பதியர்
பருவம் எய்தாத பெண்ணொருவருடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டு, பின் விடயம் வெளியானதும், பல மில்லியன் பவுண்டுகள் கொடுத்து வழக்கை செட்டில் செய்த பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட்டுடன் ஒரே காரில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்த நபர்
ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்த இளவரசர் ஆண்ட்ரூவுக்கு, பால்மோரல் மாளிகையில் குடும்பத்துடன் நேரம் செலவிட சமீபத்தில் அழைப்பு விடுத்தார் மன்னர் சார்லஸ்.
தற்போது, அதாவது நேற்று, ஞாயிறு ஆராதனையில் பங்கேற்க மன்னர் குடும்பம் தேவாலயத்துக்குச் சென்ற நிலையில், இளவரசர் வில்லியம் காரை செலுத்த, அவரது அருகில் இளவரசர் ஆண்ட்ரூவும், பின் இருக்கையில் இளவரசி கேட்டும் அமர்ந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள்.
Credit: Getty
மேலும், சர்ச்சையில் சிக்கிய மற்றொரு நபரான, மகாராணியாருக்கு நெருக்கமானவரான Lady Susan(84) என்பவரும் ராஜ குகும்பத்தினருடன் மீண்டும் இணைந்துகொண்டுள்ளார். கருப்பினப்பெண் ஒருவரை இனரீதியாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் Lady Susan.
பொது வாழ்க்கை வேறு, குடும்பம் வேறு
இப்படி சர்ச்சைக்குரிய நபர்களை குடும்பத்துடன் இணைத்துக்கொண்டுள்ள ராஜ குடும்பத்தினர், பொது வாழ்க்கை வேறு, குடும்பம் வேறு என பொதுமக்களுக்கு காட்ட விரும்புகிறார்கள் போலும்.
ஆகவேதான், ஆண்ட்ரூவுடன் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகும் என்பது நன்கு தெரிந்தும், அவருடன் பயணிக்க வில்லியம் கேட் தம்பதியர் முடிவு செய்துள்ளார்கள்.
இது குறித்து பேசிய ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward, ஆண்ட்ரூவின் பொது வாழ்க்கையைப் பொருத்தவரை, அது முடிந்துபோன விடயம். ஆனால், இன்னும் அவர் தங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் என்பதைக் காட்டும் ராஜ குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு உணர்வு ரீதியான தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள் என்கிறார்.
மகாராணியார் உயிருடன் இருந்திருந்தால், இதைத்தான் எதிர்பார்த்திருப்பார். அதாவது, குடும்பம் ஒற்றுமையாக இருப்பதைத்தான் அவர் எதிர்பார்த்திருப்பார் என்கிறார் அவர்.
இளவரசர் ஆண்ட்ரூ, மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் செல்லப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Northpix
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |